நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - இந்தியாவிலும் உணரப்பட்டது!
Jan 7, 2025, 08:53 IST1736220187778
நேபாள நாட்டில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பீகார், சிக்கின் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டது.
நேபாள நாட்டில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சரியாக காலை 6.50 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.நிலநடுக்கம் காரணமாக அந்த நாட்டில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குழுங்கின. இதனால் பீதி அடைந்த அந்நாட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகள் மற்றும் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் நேபாள நாட்டில் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்த நிலநடுக்கம்
நேபாளம் எல்லையையொட்டி உள்ள இந்திய மாநிலங்களான பீகார், சிக்கிம் மற்றும் டெல்லியின் சில பகுதியிலும் உணரப்பட்டுள்ளது.