பிரியாணிக்கு ரைத்தா கேட்டவரை அடித்து கொன்ற ஓட்டல் நிர்வாகத்தினர்

 
biriyani

ஐதராபாத்தில் பிரியாணிக்கு ரைத்தா கேட்டவரை அடித்து கொன்ற ஓட்டல் நிர்வாகத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.

Murder for Extra Dahi: Customer Murdered at Meridian Restaurant in  Hyderabad's Punjagutta After Argument Over Extra Curd for Biryani (Watch  Video) | 📰 LatestLY

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டாவில்  பிரியாணி சாப்பிடுவதற்காக மெரிடியன் ஓட்டலுக்கு  சந்திராயணகுட்டா பகுதியை சேர்ந்த லியாகத் என்ற இளைஞர் சென்று  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரியாணி சாப்பிட சென்ற லியாகத் ஓட்டல் ஊழியர்களிடம் கூடுதலாக ரைத்தா  கேட்டுள்ளார். இதில் ஓட்டல் ஊழியர்கள் லியாகத்திடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் ஓட்டல் ஊழியர்களுக்கு வார்த்தை முத்தி லியாகத்தை தாக்கினர்.

தகவலறிந்து ஓட்டலுக்கு வந்த போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி  காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். போலீசாரிடம் பேசிக்கொண்டிருந்த போதே லியாகத் திடீரென சுருண்டு விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதில் ஓட்டல் நிர்வாகத்தினர் தாக்கியதில்  சிகிச்சை பலனின்றி லியாகத் உயிரிழந்தார். தாக்குதலில் ஈடுபட்ட ஓட்டல் ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்று போலீசார்  தெரிவித்துள்ளனர்.