நிர்மலா சீதாராமனுக்கு சர்க்கரை கலந்த தயிரை ஊட்டி வாழ்த்து தெரிவித்த திரௌபதி முர்மு

 
s s

இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு குடியரசுத் தலைவர் தயிர் மற்றும் சர்க்கரை கலந்த இனிப்பை ஊட்டி விட்டு வாழ்த்து கூறினார். இது பல ஆண்டுகளாக தொடரும் மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Image

இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை தந்துள்ளார். முன்னதாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அவர் வாழ்த்து பெற்றார். இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு குடியரசுத் தலைவர் தயிர் மற்றும் சர்க்கரை கலந்த இனிப்பை ஊட்டி விட்டு வாழ்த்து கூறினார். இது பல ஆண்டுகளாக தொடரும் மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட்டின் போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அணியும் சேலை அதிக கவனம் பெறும். இந்த ஆண்டு அவர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் பட்டு புடவையை உடுத்தி இருக்கிறார். கடந்த பட்ஜெட்டின் போது பீகார் தேர்தல் நடைபெற இருந்ததால் பீகார் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற புடவையை அவர் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.