ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டாம் - இணையமைச்சராக பதவியேற்ற சுரேஷ் கோபி பேட்டி!

 
rr

ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டாம் என நேற்று இணையமைச்சராக பதவியேற்ற சுரேஷ் கோபி பேட்டி அளித்துள்ளார். 

rt

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரளாவின் திருச்சூர் லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார்.  இதையடுத்து அவர் நேற்று பிரதமர் மோடி அமைச்சரவையில் இணை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். 

ttt

இந்நிலையில் கேரள பாஜக எம்பி சுரேஷ் கோபி , தனக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டாம்.  படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன். அமைச்சர்  பதவி வேண்டாம் என தலைமையிடம் கூறியுள்ளேன். விரைவில் என்னை விடுவிப்பார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.