பெருமை பேசி மக்களை மேலும் கொடுமைப்படுத்தாதீர்கள்- மல்லிகார்ஜூன கார்கே

 
 இந்த போக்கு ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் அழித்துவிடும் - மல்லிகார்ஜுன கார்கே..

பெருமை பேசி மக்களை மேலும்  கொடுமைப்படுத்தாதீர்கள் என நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். 

ஜி-20 மாநாடு முடிந்து விட்டதால் உள்நாட்டு பிரச்சினைகளில் மோடி அரசு கவனம் செலுத்த வேண்டும் - மல்லிகார்ஜூன கார்கே

சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, “நீங்கள் மாற்ற விரும்பினால் தற்போதைய கொடுமையான நிலைமையை மாற்றுங்கள், பெயர்களை மாற்றினால் என்ன நடக்கும்? எதையாவது கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் இளைஞர்களுக்கு வேலை கொடுங்கள், உங்களால் எதவும் செய்ய முடியாவிட்டால் உங்கள் நாற்காலியை விட்டுவிடுங்கள். நீங்கள் எதிர்க்கட்சிகளை பயமுறுத்தினால் என்ன நடக்கும்? உங்கள் ஆட்சியின் பெருமைகளை பேசிக்கொண்டு மக்களை மேலும் கொடுமைப்படுத்தாதீர்கள். மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியில் இருந்து மோடி வெளியேறுவதற்கான பாதையை  இந்திய மக்கள் அமைக்கத் தொடங்கியுள்ளனர். ஜி-20 மாநாடு முடிந்து விட்டதால் உள்நாட்டு பிரச்சினைகளில் மோடி அரசு கவனம் செலுத்த வேண்டும். புதிய நாடாளுமன்றத்துக்கு செல்லும் போதாவது உங்கள் அரசியல் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். மோடி வெளிநாடு சுற்றுப்பயணங்கள் செல்கிறார். ஆனால் மணிப்பூருக்கு செல்ல மறுக்கிறார்” என்றார்.