படுக்கை அறையிலும் கேமரா... திருமணமான 48 நாட்களில் பிரிந்த இளம்பெண்ணின் உயிர்

 
வீட்டுக்குள் கேமரா பொருத்தி கண்காணிப்பு- கணவனின் செயலால் மனைவி தற்கொலை 

மும்பையில் வீட்டுக்குள் கேமரா பொருத்தி கண்காணித்த கொடூர கணவனின் செயலால் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் தானே பகுதியில் அம்பர்நாத்தில் உள்ள வீட்டுக்குள் அறையில் CCTV கேமராக்களை பொருத்தி தனது நடவடிக்கைகளை கணவன் கண்காணித்து வந்த விரக்தியில் திருமணம் முடிந்து 48 நாட்களே ஆன விஷாகா என்ற 26 வயது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கணவர் நிதின் தில்கர், விஷாகாவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து, அவரது தனியுரிமையை பறித்துள்ளார். மேலும் கேமரா மூலம் கண்காணித்து அக்கம் பக்கத்தினருடன் பேசினால் கூட மனைவியை டாக்டர் நிதின் தில்கர் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கணவர், அவரது தாயார், சகோதரர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். நகை மற்றும் பணம் கேட்டு விஷாகாவை கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தியதாக கூறப்படும் நிலையில், சந்தேகப்பட்டு மனைவியை துன்புறுத்தியதால் விஷாகா விபரீத முடிவு எடுக்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

நிதின் தில்கர்- விஷாகா தம்பதியினருக்கு ஏப்ரல் 30 அன்று திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு முன்பு எல்லாம் நன்றாக இருந்ததாகவும், ஆனால் திருமணம் முடிந்த உடனேயே நிலைமை மாறிவிட்டதாகவும் விஷாகாவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.