"மாட்டு சாணம் சாப்பிடுங்க... கொரோனா ஓடி விடும்" - மருத்துவரின் வைரல் வீடியோ!!

 
ttn

கொரோனா  பெரும் தொற்று  பரவ தொடங்கியதிலிருந்து,  அதற்கான மருந்துகளை கண்டுபிடிப்பதாக கூறி பலரும் முகம் சுழிக்கும் பல விஷயங்களை செய்து வருகின்றனர்.  கொரோனாவுக்கு மாத்திரை வழங்குவதாக பல போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் , மாட்டு கோமியம் மற்றும் மாட்டு சாணம் மட்டுமே கொரோனாவை குணப்படுத்தும் மருந்து என்று சிலர் கூறிவந்தனர். இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்களே  ஆதரவு தெரிவித்தனர்.  இந்த சூழ்நிலையில் மாட்டுச் சாணமும், கோமியமும் கொரோனா பாதிப்பிலிருந்து தடுக்கிறது என்பதற்கான அறிவியல் ஆதாரம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவே இதை  நம்ப வேண்டாம் என பல மருத்துவர்கள் கூறி வந்தனர். 

ttn

இந்நிலையில் மருத்துவர் ஒருவரே மாட்டு சாணத்தை சாப்பிடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானாவை சேர்ந்த மருத்துவர் மனோஜ் மிட்டல் பசுமாடு  கட்டி வைக்கப்பட்ட தொழுவதற்கு சென்று பசுவின் சாணத்தை எடுத்து சாப்பிட்டபடி ,  மிட்டல் சாணத்தை சாப்பிடுவதால் பசுவின் சிறுநீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விளக்குவதாக அந்த வீடியோ உள்ளது.பல கடுமையான நோய்கள் இதன் மூலம் குணமாகும் என்றும் சுகப்பிரசவத்திற்கு பெண்கள் பசுவின் சாணத்தை உண்ணவேண்டும் என்றும் பசுவின் சாணத்தை சாப்பிட்டால் நமது உடலும், மனமும் தூய்மை ஆகும். நமது ஆத்மா தூய்மையாகும். இது உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது என்று அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,  இது குறித்து கருத்து கூறும் பல மருத்துவர்கள் பசுவின் சாணத்தை சாப்பிடுவதால் பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.  மாட்டுச் சாணமும்,  மாட்டு மூத்திரமும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உதவும் என்பது தவறான கருத்து.  ஆனால் இது உண்மையில் தொற்றுநோயை உண்டாக்கும் என்று கூறி வருகின்றனர்.