லிப்டில் சிக்கி மருத்துவர் உடல் நசுங்கி மரணம்!

 
ழ்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் லிப்ட்டில் சிக்கி ஆர்.எம்.பி. டாக்டர் உடல் நசுங்கி மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சூரரம் கிருஷ்ணா நகர் காலனியில் உள்ள ஸ்ரீ சாய் மணிகாந்த ரைஸ் அடுக்குமாடி குடியிருப்பில் ஆர்.எம்.பி. டாக்டர் அம்பர் ( 39 ) லிஃப்ட் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள செல்லார் பகுதியில் அங்கிருந்த சிறுவர்கள் விளையாடி கொண்டுருந்த பந்து லிப்ட்  குழியில் விழுந்தது. பந்தை எடுத்து தரும்படி சிறுவர்கள் அக்பரிடம் கேட்டனர் இதனால்  அக்பர்  பந்தை எடுக்க சென்றார். அதே நேரத்தில் வேறு ஒருவர் மாடியில் இருந்து கீழே இறந்த லிப்ட் இயக்கியதால் அக்பரின் தலையில்  லிப்ட் சுமைக்கல் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  

உடனடியாக  எச்சரிக்கப்பட்டு மின்சார விநியோகத்தை நிறுத்துவதற்குள்   இந்த துயர சம்பவம் நடந்தது. இதனால் அக்பரின் குடும்பத்தினர் துயரத்தில் மூழ்கினர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சமீபத்திய தொடர்ச்சியான லிஃப்ட் விபத்துகளைத் தொடர்ந்து, அரசு சிறிது காலமாக நிலுவையில் உள்ள லிஃப்ட் சட்டம்-2025 ஐ செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். லிஃப்ட் தொழிலுக்கு இதுவரை எந்த அரசாங்க ஒழுங்குமுறை அல்லது மேற்பார்வை இல்லாததால் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. பிரத்யேக கண்காணிப்பு அமைப்பு இல்லாததால், பல லிஃப்ட் தொழிற்சாலை ஆபரேட்டர்கள் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் அவசரகால பிரேக்குகள் போன்ற சரியான தரங்களைப் பின்பற்றுவதில்லை, இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அரசாங்கம் முன்னர் லிஃப்ட் அமைப்பு குறித்து ஒரு சிறப்புக் கொள்கையை முன்மொழிந்தது. அந்தக் கொள்கையை உருவாக்கிய மின் ஆய்வுத் துறையின் அதிகாரிகள், அதை மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சில திட்டங்களுடன் ஒரு புதிய வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதன் இறுதி வடிவம் வழங்கப்பட்டு  செயல்படுத்தப்பட்டவுடன், அடுத்த சில மாதங்களில் மாநில அரசு  புதிய லிஃப்ட் கொள்கையை செயல்படுத்த உள்ளனத். இது நடைமுறைக்கு வந்தவுடன், லிஃப்ட் தொழிற்சாலைகள், உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் லிஃப்ட்களை நிறுவுவதற்கு அரசாங்கத்திடம் அனுமதி பெறுவது லிஃப்ட் கொள்கையின் கட்டாயமாக்கப்பட உள்ளது.