தெலங்கானாவில் காங்கிரஸுக்கு திமுக ஆதரவு

 
arivalayam

தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

rain

வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த சூழலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ,தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.  மிசோரம், சத்தீஸ்கர் ,மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்து விட்டது.  நாளை மறுநாள் ராஜஸ்தானில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  அதேசமயம் தெலுங்கானாவில் வருகிற 30-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது . இரு மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி  உள்ள நிலையில் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாக திமுக தெரிவித்துள்ளது.

rain

இந்நிலையில்   தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும்; தெலங்கானா மாநில திமுக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பணிக்குழு அமைத்து பணியாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.