கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதுவே எங்களின் முக்கிய குறிக்கோள், செயல்திட்டம்... டி.கே. சிவகுமார்

 
பெங்களூரு வன்முறையை பா.ஜ.க. அரசியல்மயமாக்குகிறது… டி.கே. சிவகுமார் குற்றச்சாட்டு

கர்நாடக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதுவே எங்களின் முக்கிய குறிக்கோள், செயல்திட்டம் என்று அம்மாநில துணை முதல்வராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.

கர்நாடக முதல்வர் பதவியை விரும்பிய நிலையில், துணை முதல்வராக காங்கிரஸ் தலைமை தேர்வு செய்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு டி.கே. சிவகுமார் பதிலளிக்கையில், மக்கள் இவ்வளவு பெரிய ஆணையை வழங்கியிருக்கும்போது, நாங்கள் நிச்சயமாக மகிழ்ச்சியடைந்து, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதுவே எங்களின் முக்கிய குறிக்கோள், செயல்திட்டம்.  நான் ஏன் வருத்தப்பட வேண்டும் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். எல்லாம் நன்றாக இருக்கிறது, நன்றாக இருக்கும். நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன் கார்கே கூறியதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்  என்று தெரிவித்தார்.

காங்கிரஸ்

கர்நாடக துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே. சிவகுமார் டிவிட்டரில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தனது மற்றும் சித்தராமையாவின் கையை உயர்த்தும் படத்தை பதிவேற்றம் செய்து, கர்நாடகத்தின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் நமது மக்கள் நலனே எங்கள் முன்னுரிமை,  அதற்கு உத்தரவாதம் அளிப்பதில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம் என்று பதிவு செய்துள்ளார்.

சிவகுமார், கார்கே, சித்தராமையா

கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் துணை முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும்  காங்கிரஸின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கர்நாடக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.