“மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டியது மத்திய அரசு தான், தமிழ்நாடு அரசு அல்ல”- டி.கே.சிவக்குமார்

 
“மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டியது மத்திய அரசு தான், தமிழ்நாடு அரசு அல்ல”- டி.கே.சிவக்குமார்

மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டியது மத்திய அரசு தான், தமிழ்நாடு அரசு அல்ல என கர்நாடக முதலமைச்சர்  டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர்  டி.கே.சிவக்குமார், “மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டியது மத்திய அரசு தான், தமிழ்நாடு அரசு அல்ல. மேகதாது அணை கட்டக்கூடாது என 40 வருடங்களாக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. மேகதாது அணை திட்ட அறிக்கைக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அனுப்பிவிட்டது. மேகதாது அணை குறித்து இனி முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசும், மத்திய நீர் வள ஆணையமும் தான். மேகதாது அணையை வைத்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அரசியல் செய்கின்றன, நாங்கள் எங்கள் வேலையை செய்கிறோம்” என்றார்.