உ.பி. மற்றும் மற்றும் பிற வட இந்திய மாநில மக்களை போல் கர்நாடக மக்களை முட்டாளாக்க முடியாது... டி.கே. சிவகுமார்

 
பெங்களூரு வன்முறையை பா.ஜ.க. அரசியல்மயமாக்குகிறது… டி.கே. சிவகுமார் குற்றச்சாட்டு

உத்தர பிரதேசம் மற்றும் பிற வட இந்திய மாநில மக்களை போல் கர்நாடக மக்களை முட்டாளாக்க முடியாது என்று பா.ஜ.க.வை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் தாக்கினார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மாநிலத்தில் வொக்கலிகா பகுதியில் காங்கிரஸ் 23 முதல் 24 இடங்களில் வெற்றி பெறும். நான் இன்னும் எதற்கும் (முதல்வர் பதவி) போட்டியாளராக இல்லை. காங்கிரஸ் என்னை மாநில தலைவராக்கியுள்ளது. அனைவரும் ஒன்றாக அமர்ந்து முடிவெடுப்போம். உள்ளூர் (மாநிலத்தில் நிலவும்) பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதுதான் முன்னுரிமை. 

காங்கிரஸ்

உள்ளூர் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது என்றும் எங்கள் தலைவர்கள் முடிவு செய்தனர். அவர்கள் (பா.ஜ.க.) வகுப்புவாத கோணத்தில் பிரிக்க முயன்றனர். நாங்கள் அதை செய்யவில்லை. ஊழலற்ற அரசாங்கம், வளர்ச்சி சார்ந்த அரசு, சிறந்த பெங்களூரு மற்றும் உலகளாவிய கர்நாடகத்திற்கான தொலைநோக்கு பார்வையுடன் கூடிய  அரசாங்கம் என்று கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை கர்நாடக மக்கள் நம்புகிறார்கள். 

பா.ஜ.க.

பஜ்ரங் தளம் பிரச்சினையை ஊடகங்கள் எடுத்தன, ஆனால் அது பிரச்சினை அல்ல. பிரச்சினைகள் விலைவாசி உயர்வு மற்றும் உள்ளூர் பிரச்சினைகள். உத்தர பிரதேசம் மற்றும் பிற வட இந்திய மாநில மக்களை போல் கர்நாடக மக்களை முட்டாளாக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.