டிட்வா புயலால் கடும் மண் சரிவு - தமிழர்கள் 23 பேர் உயிரிழப்பு

 
க்க் க்க்

இலங்கையின் கண்டி- சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண் சரிவால் 23 தமிழர்கள் உயிரிழந்தனர். 

Image

இன்று காலை கேரளா வயநாட்டில் ஏற்பட்ட, நிலச்சரிவு போல், இலங்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் நிலச்சரிவினால் ஒரு கிராமமே மண்ணுக்குள் புதையுண்டது. கண்டி அலவத்துகொட ரம்புக்கெல எனும் தமிழர்கள் அதிக வசிக்கும் பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கி சுமார் 38 குடும்பங்களை சேர்ந்த சுமார் 145ற்கும் அதிகமானோர் தமது வீட்டோடு மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதில் 23 தமிழர்களின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மண் சரிவில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்ற இளைஞர்கள் பலரும் மண்ணுக்குள் பரிதாபமாக புதையுண்டனர்.  சுமார் 135 ற்கும் மேற்பட்டோரின் உடல்கள் மண்ணுள் புதைந்திருக்கலாமென மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கனமழையில் சிக்கி இதுவரை 153 பேர் பலியாகி உள்ளனர். 200 பேரை காணவில்லை. 191 பேர் காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவு மற்றும் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இலங்கைக்கு 'ஆபரேஷன் சாகர் பந்து' மூலம் இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.