‘குர்குரே’ வாங்க மறந்த கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி

 
kurkure

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஒரு பெண் தனது கணவரிடமிருந்து ரூ.5 குர்குரே பாக்கெட்டைப் பெறத் தவறியதால் விவாகரத்து கோரினார். 

கட்டுரை-படம்
நொறுக்கு தீனிக்கு அடிமையான ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை தினமும் ரூ.5 மதிப்புள்ள குர்குரே பாக்கெட் வாங்கிவர கூறியுள்ளார்.ஒருநாள் கணவர் வாங்கிதர மறந்த நிலையில், கோபமடைந்த மனைவி, வீட்டை விட்டு வெளியேறி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். சில நாட்களுக்குப் பிறகு, அவர் விவாகரத்து கோரி தனது கணவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றதாக தெரிகிறது. தினமும் நொறுக்குத் தீனிகளை உண்ணும் தனது மனைவி குர்குரேக்கு அடிமையாகி வருவது கவலையளிப்பதாக கணவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மனைவியோ மாறாக, கணவர் தன்னை அடிப்பதால், தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.