“100 முறை மன்னிப்பு கேட்கத் தயார்”- அடிபணிந்த தர்மேந்திர பிரதான்

 
dharmendra pradhan

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழி கொள்கை மற்றும் கல்வி நிதியை விடுவிக்க கோரி பேசிய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து  நாகரிக மற்றவர்கள் எனக் கூறிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் வலுத்துவருகிறது.

pradhan

இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே... நாங்கள் எந்த மொழியும் கட்டாயப்படுத்தப்படவில்லை. நீங்கள் என்னை முட்டாள் என கூறலாம். ஆனால் தமிழக மக்களை எல்லா நேரத்திலும் முட்டாளாக்க முடியாது. பழங்கால சிந்தனையிலிருந்து வெளியே வாருங்கள். ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி மகத்துவம் உள்ளது. எந்த மொழியும் யார் மீதும் திணிக்கப்படவில்லை. எந்த மொழியை படிக்க வேண்டும் என்பது அவரவர் விருப்பம். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை ஆதரிப்பவர்களுடைய சொந்தப் பள்ளிகளில் தமிழ் மொழி சரிந்து கொண்டிருக்கிறது. தேசிய கல்விக் கொள்கை என்பது தாய் மொழியையே ஊக்குவிக்கிறது. பிறமொழிகள் அவரவர் விருப்பத்தேர்வு தான். இருப்பினும் எனது பேச்சு யார் மனதையாவது புண் படுத்தியிருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்கத் தயார். கனிமொழி எனக்கு சகோதரி, நான் தவறாக பேசி இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழருக்கும், தமிழகத்துக்கும் எதிரானது அல்ல. அதே நேரம், ஜெயலலிதாவை பேரவையில் அவமதித்தவர்கள் எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். திருக்குறளை அனைத்து இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என பிரதமர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பி.எம்ஸ்ரீ  திட்டம் தொடர்பாக கடந்த ஆண்டு தமிழக தலைமை செயலாளர் எனக்கு கடிதம் எழுதினார். பிஎம்ஸ்ரீ பள்ளிகளை நிறுவ தமிழக அரசு ஆர்வமாக இருப்பதாக தமிழக தலைமை செயலாளர் கடிதத்தில் தெரிவித்தார். மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர் தான் புதிய தேசிய கல்வி கொள்கையை குழு இறுதி செய்தது” என்றார்.