படித்த முதல்வர் மீண்டும் பொய்களை விற்க தயாராகி விட்டார்.. அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கிய மத்திய அமைச்சர்

 
டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கு  இலவச பயணம்….. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

ரூ.2,000 நோட்டுகள் விவகாரத்தில் பிரதமர் மோடியை தாக்கிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, படித்த முதல்வர் மீண்டும் பொய்களை விற்க தயாராகி விட்டார் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தாக்கினார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்திய ரிசர்வ் வங்கி, ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவித்தது. மேலும், இம்மாதம் 23ம் தேதி (நாளை) முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கி கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கிகளில் கொடுத்து சில்லரை மாற்றி கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப நடவடிக்கையை குறிப்பிட்டு பிரதமர் மோடியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்தார்.

மோடி

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில், ரூ.2,000 நோட்டுகள் ஊழலை ஒழிக்கும் என்று முதலில் கூறப்பட்டது. தற்போது அவற்றை திரும்ப பெறுவதால் ஊழலுக்கு முடிவு கட்டுவதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் பிடித்த பிரதமர் வேண்டும் என்று சொல்கிறேன், இல்லையெனில் மக்கள் கஷ்டப்பட வேண்டும் என்று பதிவு செய்து இருந்தார்.

காங்கிரஸ் முதல்வர்களிடம் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க சொல்லுங்க ராகுல்.. தர்மேந்திர பிரதான்

அரவிந்த் கெஜ்ரிவாலின் விமர்சனத்துக்கு மத்திய அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தர்மேந்திர பிரதான் பதிலடி கொடுத்தார். தர்மேந்திர பிரதான் கூறுகையில், ரூ.2,000 நோட்டுகள் செல்லும். படித்த முதல்வர் மீண்டும் பொய்களை விற்க தயாராகி விட்டார். கபீர் தனது கவிதையில் கூறியுள்ளப்படி, கல்வி மட்டுமே ஒருவரை அறிவாளியாக மாற்றாது. ஷீஷ் மஹாலில் (அரவிந்த் கெஜ்ரிவால்  குடியிருப்பு) வசிக்கும் கடினமான ஊழல்வாதிகள் பதற்றம் அடைவது இயற்கையானது. மதுபான ஊழலில் மூளையாக இருந்தவர் செய்த கடின உழைப்பு எல்லாம் வீணாகப் போகிறது போலிருக்கிறது என்று தெரிவித்தார்.