அயோத்தியில் ராமரை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!

 
tn

அயோத்தி ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டை விழா முடிந்த முதல் நாளிலேயே  தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

tn

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. கோவில் திறக்கப்பட்டதை தொடர்ந்து சிலை திறப்பதற்கான பிராண பிரதிஷ்டை விழா நடைபெற்றது. ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.  மைசூரை அடிப்படையாகக் கொண்ட ஸ்தபதி (சிற்பி) அருண் யோகிராஜ் வடிவமைத்த ஸ்ரீராமர் சிலைதான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அயோத்தி ராமர் கோவில் கருவறையில் உள்ள பால ராமர் சிலை பிரதிஷ்டைக்கு பின்னர் பொதுமக்களின் வழிப்பாட்டிற்காக திறக்கப்பட்டது. பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி தீபாராதணை காட்டி வழிபாடு செய்தார். இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. பால ராமரை தரிசிப்பதற்காக பக்தர்கள் கூட்டம் குவிந்துள்ளது. அதிகாலை முதல் அதிக அளவில் மக்கள் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

tn

அயோத்தி ராமர் கோவிலில் நேற்று பிராண பிரதிஷ்டை நடைபெற்ற நிலையில் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையும் பொதுமக்கள் குழந்தை ராமரை தரிசிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.