எதிர் வரும் நாடளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் 28 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்... தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை

 
நிலவில் எல்லா குடும்பத்துக்கும் பிளாட் என்பது மட்டும்தான் இல்லை-காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கலாய்த்த தேவேந்திர பட்னாவிஸ்

எதிர் வரும் நாடளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் 28 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்தார். 

மகாராஷ்டிராவின் துணை முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ் நேற்று புனேவில் பா.ஜ.க.வின் கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பா.ஜ.க.  தொண்டர்களிடம் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் நாம் தோற்றோம். ஆனால் நமது வாக்கு சதவீதம் குறையவில்லை. மதச்சார்ப்பற்ற ஜனதா தளத்தின் வாக்குகள் குறைந்ததால் காங்கிரஸூக்கு பலன் கிடைத்தது. 

பா.ஜ.க.

ஆனால் எதிர் வரும் நாடளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் 28 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். காங்கிரஸ் வெற்றியை தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவ சேனா (யு.பி.டி.) ஏன் கொண்டாடுகின்றன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களால் செய்யக்கூடியது இதுதான். பா.ஜ.க.-சிவ சேனா மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் என்பதால் (மகாராஷ்டிராவில்) ஆட்சி அமைக்கும் மகா விகாஸ் அகாடியின் கனவு ஒரு போதும் நிறைவேறாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ்

கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 10ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க. 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றியதையடுத்து அங்கு ஆட்சியமைக்க உள்ளது. மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்றவர்கள் 4 இடங்களில் வெற்றி பெற்றனர்.