விவசாயிகள் பெயரில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன.. எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டிய மகாராஷ்டிர துணை முதல்வர்

 
வெள்ளிக்கிழமைக்குள் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்கிறார் தேவேந்திர பட்னாவிஸ்! சிவ சேனாவுக்கு அல்வா கொடுத்த பா.ஜ.க.

விவசாயிகள் பெயரில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என்று எதிர்கட்சிகளை மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டினார்.

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் எதிர்பாராத மழையால் பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கடுமையா பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று எதிர்பாராத மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாதி கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனை, விவசாயிகள் பெயரில் அரசியல் செய்கிறார்கள் என்று எதிர்கட்சியினரை பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், அம்மாநில துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டினார். 

ஏக்நாத் ஷிண்டே

இது தொடர்பாக மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது: விவசாயிகள் பெயரில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன, அவர்கள் விவசாயிகளுக்கு உதவ விரும்பவில்லை, இவை அனைத்தும் முதலை கண்ணீர். வெங்காய விவசாயிகளுக்கு உதவி செய்வதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஏற்கனவே அறிவித்துள்ளார். நாங்கள் விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் உதவி செய்தோம். 

விவசாயிகள்

இன்னும் எதிர்பாராத மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பஞ்சநாமா செய்து வருகிறோம். ஆனால் எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்கு உதவி விரும்பவில்லை. ஆனால் குழப்பத்தை உருவாக்க விரும்புகின்றன. எதிர்க்கட்சிகளின் எந்த அளவு எதிர்ப்பும் விவசாயிகளுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதில் இருந்து எங்களை திசை திருப்ப முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.