தீர்ப்பின் விபரம்! ஹத்ராஸ் சம்பவத்தில் 3 பேர் விடுதலை ஏன்?

 
h

நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஹத்ராஸ் இளம்பெண்  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்த வழக்கில் நான்கு பேரில் மூன்று பேரை விடுதலை செய்திருக்கிறது ஹத்ராஸ் நீதிமன்றம்.  ஒருவர் மட்டும்தான் குற்றவாளி என்று சொல்லி அவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி இருக்கிறது நீதிமன்றம்.

ra

 நீதிபதி திர்லோக்பால் சிங் அளித்துள்ள தீர்ப்பில்,   இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டதாக பார்க்கப்படுவதால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சந்திக்க வந்த பிறரால் துன்புறுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட இளம்பெண் குற்றச்சாட்டப்பட்ட நான்கு பேர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்ட இளம் பெண் சம்பவத்திற்கு பின்னர் எட்டு நாட்களுக்கு பின்னரும் பேசியதால் குற்றவாளி சந்திப்பின் நோக்கம் அந்த இளம் பெண்ணை கொலை செய்வதாக இருந்திருக்காது.  அதனால் குற்றவாளி கொலை குற்றத்திற்கான தண்டனை பெற முடியாது என்று கூறியுள்ளார்.

 மேலும்,  இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்பதற்கு எந்தவித மருத்துவ ஆதாரமும் இல்லை.  மருத்துவ பரிசோதனைகளில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்று இல்லை.  நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண் அந்த நான்கு பேரின் பெயர்களையும் போலீசிடமோ அல்லது ஊடகத்திடமோ அந்த சம்பவம் நடந்த அன்றே கூட தெரிவித்திருக்கலாம்.  ஆனால் அந்த பெண் அதை செய்யவில்லை.

th

 சம்பவத்திற்கு பின்னர் ஐந்து நாட்களுக்கு கழித்து அளித்த வாக்கு மூலத்தில் சந்திப் என்ற 20 வயது இளைஞரின் பெயரை மட்டுமே பாதிக்கப்பட்ட பெண் கூறி இருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்திப் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து இருக்கிறார்.  அப்போது அந்தப் பெண் மயங்கி விழுந்து இருக்கிறார்.  இந்த சம்பவம் நடந்து எட்டு நாட்கள் பாதிக்கப்பட்ட பெண் பேசி இருக்கிறார்.  அதனால் குற்றவாளி சந்திப்பின் நோக்கம் இந்த பெண்ணை கொலை செய்வதாக இருந்திருக்க முடியாது.  


உயிரிழந்த பெண்ணின் காயங்களின் தன்மையை பார்க்கும் போது இது ஒரு நபரால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகிறது என்று தெரிவித்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கும் குற்றவாளியின் பெண்ணின் குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை இருந்திருக்கிறது என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.   இளைஞருக்கும் அந்த இளம் பெண்ணுக்கும் இடையே காதல் இருந்து வந்ததால் பெண்ணின் குடும்பத்தினர் குற்றவாளியின் குடும்பத்தினர் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.