இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும் என தேசபந்து நாளிதழ் கணிப்பு

 
india

இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும் என்று தேசபந்து நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Modi vs rahul

தேசபந்து என்ற நாளிதழின் டிஜிட்டல் சேனல் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்திய கூட்டணிக்கு 255 முதல் 290 தொகுதிகள் வரை கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி 207 முதல் 241 தொகுதிகளை கைப்பற்றக்கூடும்  கணிக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் பாஜக கூட்டணிக்கு 46 முதல் 48 இடங்களும், இந்தியா கூட்டணிக்கு 32 முதல் 34 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி 28 முதல் 30 இடங்களை பிடிக்கும் என தேசபந்து நாளிதழ் கணித்துள்ளது. அங்கு பாஜக கூட்டணிக்கு 18 முதல் 20 இடங்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் 18 முதல் 20 இடங்களையும், பாஜக கூட்டணி 8 முதல் 10 இடங்களையும் கைப்பற்றும். என்.டி.ஏ கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் ஆர்.ஜே.டி. காங்கிரஸ் கூட்டணி 24 முதல்  26 தொகுதிகளையும், என்.டி.ஏ. கூட்டணி 14 முடல் 16 இடங்களையும் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Modi

மத்திய பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளில் பாஜக 24 முதல் 26 இடங்களையும், காங்கிரஸ் 3 முதல் 5 தொகுதிகளையும் கைப்பற்றலாம் என தேசபந்து நாளிதழ் கணித்துள்ளது. 42 மக்களவை தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 26 முதல் 28 இடங்களையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜக 11 முதல் 13 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக 19 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு என  தேசபந்து நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளில் காங்கிரஸ்க்கு 6 முதல் இடங்கள் வரை கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.