நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அதானி விவகாரத்தை எழுப்புவோம்.. திரிணாமுல் காங்கிரஸ் உறுதி

 
 அதானி குழும பங்குகள்..

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியில் அதானி குழும விவகாரம், மத்திய அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவது போன்ற பிரச்சினைகளை திரிணாமுல் காங்கிரஸ் எழுப்பும் என்று அந்த கட்சியின் எம்.பி. டெரெக் ஓ பிரையன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி வரும் 13ம் தேதி தொடங்குகி ஏப்ரல் 6ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியில், அதானி குழும விவகாரம், மத்திய அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவது போன்ற பிரச்சினைகளை திரிணாமுல் காங்கிரஸ் எழுப்பும் என்று அந்த கட்சியின் எம்.பி. டெரெக் ஓ பிரையன் தெரிவித்தார். இது தொடர்பாக டெரெக் ஓ பிரையன் கூறியதாவது:

டெரெக் ஒ பிரையன்

எல்.ஐ.சி. மற்றும் எஸ்.பி.ஐ.யின் இடர்பான (அதானி குழும நிறுவனங்களில்) முதலீடுகள், நடுத்தர வர்த்தகத்தின் மற்றும் லட்சக்கணக்கான இந்தியர்களின்  சேமிப்புகளை உள்ளடக்கியதால்,  அது குறித்து அவையில் விவாதிக்கப்படும்.  எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கலையும் நாங்கள் எழுப்ப விரும்புகிறோம். இதில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மற்றும் பி.எம்.ஏ.ஒய். போன்ற திட்டங்களுக்கான நிதியை நிறுத்தி வைப்பதும் அடங்கும், அவை  பாதிக்கப்படக் கூடிய மக்களில் பெரும்ப பகுதியினருக்கு முக்கியமானவை.

4 மாதத்தில் வேலையிழந்த 2 கோடி பேர்… வேலையின்மை உண்மையை மறைக்க முடியாது… ராகுல் காந்தி ஆவேசம்

விசாரணை முகமைகள் மற்றும் அரசியலமைப்பு அமைப்புகள் உள்ளிட்ட நிறுவனங்களை தவறாக பயன்படுத்துவது குறித்து சபையின் கவனத்தை ஈர்ப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்,  அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை முன்னிலைப்படுத்தவும், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கான தங்களின் கோரிக்கையை புதுப்பிக்கவும் திரிணாமுல் காங்கிரஸ் விரும்புகிறது.