புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

 
delhi

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டெல்லி காவல்துறை ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

இந்தியாவின் தற்போதைய பாராளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆகையால் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்த மத்திய அரசு ,ராஜபாதை சீரமைப்பு , துணை  குடியரசுத் தலைவர் இல்லம், பிரதமர் இல்லம், மத்திய செயலகம் உள்ளிட்டவை அடங்கிய அடங்கிய புதிய பாராளுமன்ற கட்டிடத்தைக் கட்டியுள்ளது. சென்டிரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக  கட்டப்பட்டு வரும், இதற்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.  இந்த நிலையில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் வருகிற 28-ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.  இதனிடையே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் காரணமாக மே 28ம் தேதி அன்று நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக அறிவித்துள்ளது. இதேபோல்   திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, விசிக உள்ளிட்ட 19 கட்சிகள் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.


இந்நிலையில், இந்த திறப்பு விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டெல்லி காவல்துறை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறக்க உள்ள நிலையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனையில் டெல்லி எல்லை பகுதிகளில் சோதனை சாவடிகளை அமைப்பது உள்ளிட்டவை குறித்தும், கண்காணிப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.