"15 ஆண்டு பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது"- அரசின் அதிரடி முடிவால் வாகன ஓட்டிகள் தவிப்பு

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க 15 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களையும், 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களையும் தடை செய்ய வேண்டும் என்ற 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களுக்கும் பெட்ரோல் கிடையாது அறிவிக்கப்பட்டுள்ளது. நகரின் 500 எரிபொருள் நிலையங்களில், 477 நிலையங்கள் வாகனங்களின் வயதை கண்டறியும் வகையில் அமைப்புகள் நடைமுறைக்கு வந்துள்ளன. எரிபொருள் நிரப்புவதைத் தடை செய்யும் இந்தக் கொள்கை, ஆரம்பத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று திட்டமிடப்பட்டது .
இருப்பினும், அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (ANPR) கேமராக்கள் நிறுவுவதில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக இம்மாத இறுதியில் திட்டத்தை செயல்படுத்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பெட்ரோல் பங்குகளில் வாகன எண் போர்டை ஸ்கேன் செய்து, வாகனத்தின் வயதை தீர்மானிக்க பதிவுத் தரவை மீட்டெடுக்க ANPR கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.