டெல்லி ஹோட்டல் தீ விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு
டெல்லி உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி மால்வியா நகரில் உணவகத்தில் பயங்கர தீ விபத்து - பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) June 3, 2026
தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் என தகவல்..
தீயில் இருந்து தப்பிக்க முயன்ற இரண்டு பெண்கள் கட்டிடத்திலிருந்து கீழே குதிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி..#Delhi pic.twitter.com/M3woFL4EJT
டெல்லி மால்வியா நகரில் உள்ள ஹோட்டல் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. தீயில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து சிலர் கீழே குதித்துள்ளனர். இன்னும் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். உயிரிழந்தோரில் பலர் வெளிநாட்டினர் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா என 40 வெளிநாட்டவர்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. முதலில் கீழ் தளத்தில் கிச்சனில் ஏற்பட்ட தீ விபத்து ஹோட்டல் முழுக்க பரவி விபத்து நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில், 6 அறைகளுக்கு மட்டும் உரிமம் பெற்று, 25 அறைகளை வாடகைக்கு விட்டதால்தான் இந்த கோர சம்பவம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தீயில் இருந்து தப்பிக்க முயன்ற இரண்டு பெண்கள் கட்டிடத்திலிருந்து கீழே குதிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

