கோவிட் விதிமுறை மீறல் ஒரே நாளில் 5,590 பேர் மீது வழக்கு.. ரூ.1.10 கோடி அபராதம் வசூல்.. டெல்லி அரசு

 
அபராதம்

டெல்லியில் கோவிட் விதிமுறைகளை மீறியதாக 5,590 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது மற்றும் ரூ.1.10 கோடி அபராதம் வசூல் செய்துள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் மட்டும் புதிதாக 21 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றும்படி மக்களை டெல்லி அரசு வலியுறுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ்

மேலும், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் அல்லது விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு டெல்லி அரசு அபராதம் விதித்து வருகிறது. கடந்த 11ம் தேதியன்று மட்டும் கோவிட் விதிமுறைகளை மீறியவர்களிடம் மொத்தம் ரூ.1.10 கோடியை அபராதமாக டெல்லி அரசு வசூல் செய்துள்ளது. மொத்தமுள்ள 11 மாவட்டங்களில் தெற்கு மற்றும் கிழக்கு டெல்லியை சேர்ந்தவர்களை அதிகளவில் கோவிட் விதிமுறைகளை மீறியுள்ளனர். 

கோவிட் கட்டுப்பாடுகள்

டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று (11ம் தேதி) கோவிட் விதிமுறைகளை மீறியதாக 5,590 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 5,540 பேர் மீது மாஸ்க் அணியாதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்று 108 பேர் மீதும், பொது இடங்களில் துப்பியதற்காக 42 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி அரசின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் கோவிட் விதிமுறைகைளை கடைப்பிடிக்க தொடங்கி விட்டனர் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.