டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா!!

 
delhi

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ttn

இந்தியாவில் கொரோனா  பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நேற்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 750 பேர் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒமிக்ரான் பாதிப்பும் 1,700 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக டெல்லியில் ஒமிக்ரான் பாதிப்பு  எண்ணிக்கை 351 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூழலில் செய்தியாளர்களை சமீபத்தில் சந்தித்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், டெல்டாவை விடவும் ஒமிக்ரான் தொற்று மிதமானது தான் . ஆனாலும் முககவசம் அணியுங்கள்,  சமூக இடைவெளியை கடைபிடிக்கவும்,  சோப்பு போட்டு கைகளை கழுவுங்கள், தொற்றை எண்ணி  மக்கள் பீதியடைய வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.

ttn

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு  கொரோனா பாதிப்பு  பாசிடிவ் என்று வந்துள்ளது.லேசான அறிகுறி உள்ளதால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொண்டு தனிமை படுத்திக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.