டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்
Mar 16, 2024, 10:55 IST1710566751800

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜரானார் கெஜ்ரிவால். அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம்.
மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் நேரில் ஆஜரான நிலையில் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 8 முறை சம்மன் அனுப்பியும் அமலாக்கத்துறை விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராக டெல்லி முதல்வருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.