‘பலியானோரின் உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட உலோகத் துண்டுகள்’- பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர்

 
s s

டெல்லி கார் வெடிப்பில் பலியானோரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது.

Delhi car blast: India on edge after deadly explosion near Red Fort | CNN

டில்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. இச்சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் அனைவரும் நன்கு படித்த டாக்டர்கள் என தெரியவந்துள்ளது. டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உமர் முகமது நபியின் நண்பர் முசம்மை காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், உயிரிழந்தவர்களின் நுரையீரல் குடல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் கார் வெடிப்பால் சிதைந்துள்ளன. சிலரது உடல்களில் இருந்து சில உலோகத் துண்டுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. உயிரிழந்தவர்கள் வெடிப்பின் காரணமாக கடுமையான வலி மற்றும் வேதனையை அனுபவித்திருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.