#BREAKING அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! வாரத்தில் 2 நாட்கள் Work From Home

 
government office leave

டெல்லி அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் Work From Home வழங்கி அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பிரதமரின் வேண்டுகோளைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் வாரத்திற்கு 2 நாட்கள் வீட்டிலிருந்து பணிபுரிய டெல்லி அறிவிப்பு.
அமெரிக்கா,  இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் மேற்கொண்டு  வருவதால் போர் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும்  எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணையின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இருப்பினும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கிய மானியத்தின் காரணமாக தற்பொழுது நாடு முழுவதும் விலையெற்றம் செய்யப்படவில்லை. இருப்பினும் இன்னும் சில நாட்களில் விலை ஏற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இதற்காக கொரோனா காலகட்டத்தை பின்பற்றி வீட்டில் இருந்து பணி செய்யும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்நிலையில் டெல்லி அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் Work From Home வழங்கி அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. அரசு அதிகாரிகள் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கவே டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.