கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

 
bomb blast

கேரள குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 

கேரள மாநிலம், எர்ணாகுளம் களமச்சேரி என்ற இடத்தில் ஜெபக்கூட்டம் நடைபெற்றிருக்கும்போது மூன்று வெடிகுண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 2000க்கும் மேற்பட்டோர் பங்கு கொண்ட இடத்தில் நடைபெற்ற வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக 36 பேர் படுகாயம் அடைந்தனர். 3 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். மேலும் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கேரள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய டொமினிக் மார்ட்டின் கொடக்கரா காவல் நிலையத்தில் சரணடைந்தார். சபையின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை என்பதால் குண்டுவைத்ததாக மார்ட்டின் வாக்குமூலம் அளித்தார். 

இந்த நிலையில், கேரள குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. குண்டுவெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மலையத்தூரைச் சேர்ந்த பிரவீன் (26) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக கேரள குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.