நேபாளம் பெருவெள்ளம் - 734 பேர் உயிரிழப்பு

 
s

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்துள்ளது. ஐந்தாம் நாளான ஞாயிற்றுக்கிழமையன்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்த நிலையில், இன்னும் காணாமல் போன நூற்றுக்கணக்கானோரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நேபாளம் பெருவெள்ளத்தில் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தில் சுமார் 2,500 பேரையும், திபெத் பகுதியில் 500 பேரையும் காணவில்லை என புகார்கள் பதிவாகி உள்ளன. 

Nepal-China flood survivors reach safe areas as families await news of  nearly 3,000 missing | WPTF FM 92.9 / AM 680


குறைந்தது 3,044 பேர் காணாமல் போயுள்ளனர். நேபாளத்தில், நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் உட்பட 2,498 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். அதே நேரத்தில், திபெத்தில் 16 பேர் உயிரிழந்ததாகவும், 546 பேர் காணாமல் போனதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில், நீர்மின் திட்டங்களில் உள்ள சுரங்கங்களுக்குள் சிக்கியிருப்பதாக நம்பப்படும் தொழிலாளர்களை மீட்க, மீட்புக் குழுக்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவிலிருந்து 57 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.மேலும், சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளிலிருந்தும் கூடுதல் உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவும் கனடாவும் தலா 3.6 மில்லியன் டாலர் வழங்குவதாக உறுதியளித்துள்ளன, அதே நேரத்தில் இங்கிலாந்து 6.8 மில்லியன் டாலரை வழங்கியுள்ளது. ஐ.நா. 2.5 மில்லியன் டாலர் அவசர நிதியை வெளியிட்டுள்ளது குறிப்பிடதக்கது.