கேரளா நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

 
அ

வயநாடு அருகே சுரங்கப்பாதை பணியின்போது ஏற்பட்ட நிலச்சாிவில் சிக்கி பலியானோா் எண்ணிக்கை 5 ஆக உயா்ந்துள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, வயநாடு-கல்லாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சரிவில் இன்னும் பலர் சிக்கியுள்ளதாகவும் வெளியாகியுள்ள முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. நிலச்சரிவை அடுத்து 70 பேர் கொண்ட தேசிய பேரிடர் படையினர் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மண்ணை அகற்றவேண்டுமென ஜூன் 25ஆம் தேதியே ஆட்சியர் அறிவுறுத்தியும் ஒப்பந்ததாரர் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே வயநாடு நிலச்சரிவு குறித்து விளக்கம் அளித்துள்ள முதல்வர் சதீசன், வயநாடு மேப்பாடியில் நிலச்சரிவு ஏற்பட்டதற்கு சுரங்கப்பாதை ஒப்பந்ததாரர் அலட்சியமே காரணம். தேசிய சுரங்கப்பாதை கட்டுமான இடத்தில் மண்ணை அகற்ற ஆட்சியர் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார்” எனக் கூறியுள்ளார்.