பயங்கர வேகம்... பாலத்தில் இருந்து கீழே விழுந்து 2 இளைஞர்கள் மரணம்

 
Accident

ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் அதிவேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் பாலத்தில் இருந்து கீழே விழுந்து 2 இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு  மரணமடைந்த அதிர்ச்சி சி.சி கேமிரா காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம்  என்ஏடி  மேம்பாலத்தில் நேற்று இரவு  சாலையில் அதிவேகத்தில் சென்ற டூவிலர் வாகனத்தில் 3 இளைஞர்கள் பயணம் செய்த நிலையில், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் பக்கவாட்டில் மோதி வாகனத்தில்  இருந்தவர்கள்  தூக்கி வீசப்பட்டு  2 இளைஞர்கள்  நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 

இந்த தகவல் குறித்த அறிந்த போலீசார், உயிரிழந்த இளைஞர்கள் குறித்து விசாரணை நடத்தியதில்  விசாகப்பட்டினம் ஆரவல்லி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தனவரவு குமார் மற்றும் பவுன்குமார் ஆகியோர் இறந்தது முதற்கட்டமாக தெரியவந்தது. இவர்கள் ஒருசேர இருசக்கர வாகனத்தில் பயணித்த நிலையில், மேம்பாலத்தில் அதிவேகத்தில் வந்தபோது வாகனத்தை திருப்பத்தில் கட்டுப்படுத்த இயலாமல் விபத்து நடந்தது உறுதியானது. இதன் பதைபதைப்பு காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.