திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் ரத்து.. முக்கிய அறிவிப்பு இதோ!

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் ரத்து.. முக்கிய அறிவிப்பு இதோ!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வர். பக்தர்களுக்கு அன்னதானம் முதல் தங்குமிடம் வரை அனைத்தும் திருப்பதி தேவஸ்தானம் வழங்கும். கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பு, திருப்பதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பல மாதங்களாக பக்தர்கள் செல்லாததால், வருவாய் தட்டுப்பாடு ஏற்பட்டு உண்டியல் பணத்தை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு குறைந்ததால் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் ரத்து.. முக்கிய அறிவிப்பு இதோ!

இக்கோவில் ஆண்டுக்கு 4 முறை சுத்தப்படுத்தப்படுவது வழக்கம். வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட நான்கு முக்கிய நிகழ்வுகளுக்கு முன்தினம் கோவில் நடை சாத்தப்படும். அன்று பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.

அந்த வகையில், வரும் 13ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி கொண்டாடப்பட இருப்பதால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 5 மணி நேரத்திற்கு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதாவது, நாளை காலை 6 மணி முதல் 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் 12 மணிக்கு பிறகே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.