ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்
தெலங்கானா மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியியல் தொல்லை கொடுத்த நடன ஆசிரியரை பள்ளிக்கு சென்று அடித்து உதைத்த பெற்றோர், அவரை போலீசில் ஒப்படைத்தனர்.

தெலுங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டம் போடுப்பலில் உள்ள கிரண் இன்டர்நேஷனல் பள்ளியில் டான்ஸ் மாஸ்டராக ஒருவர் குழந்தைகளுக்கு நடனம் கற்றுக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் ஒன்றாம் வகுப்பு மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். பள்ளியில் தகாத முறையில் அந்த குழந்தையை தொட்டது குறித்து வீட்டிற்கு சென்ற சிறுமி பள்ளியில் நடன ஆசிரியர், தொடக்கூடாத இடத்தில் தொடுவதாக கூறியதால் ஆவேசமான பெற்றோர் பள்ளிக்கு சென்று கேள்வி எழுப்பினர். பின்னர், நடன ஆசிரியரை பள்ளி நிர்வாகம் அழைத்தபோது சிறுமியின் பெற்றோர் அவரை கீழே தள்ளி அடித்து உதைத்தனர். அப்படிப்பட்டவரை வாழ விடக்கூடாது என்று ஆவேசத்துடன் அவமானப்படுத்தியதோடு அடித்தனர்.
இதற்கிடையில், ஆசிரியர் சிறுமியை தொடவில்லை என்று கூறிய நிலையில், அநாகரீகமாக தொட்டார் என அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், பள்ளி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. பின்னர் பள்ளியில் களம் இறங்கிய போலீசார், பெற்றோரிடம் புகார் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர். இதனை தொடர்ந்து ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.


