அப்பா என்னிடம் தவறாக நடந்தார்! குஷ்புவை தொடர்ந்து சுவாதி குமுறல்

 
kஹ்

எட்டு வயதில் அப்பாவால்பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்.    பெற்ற மகளை,  ஒரே மகளை  பாலியல் துன்புறுத்தல் செய்வதும் மனைவியை அடிப்பதையும் அவர் ஆணுக்கு உரிய பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தார்.  எட்டு வயதில் அப்பா பாலியல் தொல்லை கொடுத்த போது அப்போது எதிர்க்கும் துணிவு இல்லை.  15 வயதில் தான் அந்த துணிவு வந்தது.

 சின்ன வயதில் நடந்த அந்த சம்பவத்தின் பாதிப்பு வாழ்க்கை நெடுகிலும் இருப்பது தான் துயரம் என்று வெளிப்படையாக பேசியிருந்தார் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ.

ச்ந்

 இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மாலிவாலும்  இதே போன்ற மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்.  அவரும் சிறுவயதில் தனது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியிருக்கிறார்.

 டெல்லியில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால்,  அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது ,  நான் சிறுமியாக இருந்தபோது என் தந்தை என்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்.  அதனால் என்னை அடித்து துன்புறுத்துவார்.  தலைமுடியை பிடித்து சுவரில் கொடூரமாக தாக்குவார்.  

 வெளியே சென்று அவர் எப்போதெல்லாம் வீட்டுக்கு வருவாரோ அப்போது நான் பயந்து படுக்கைக்கு கீழ் சென்று ஒளிந்து கொள்வேன் என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

 தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பூ பெற்ற தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்திருந்த நிலையில்,  தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவியும் அதே மனக்குமுறலை வெளிப்படுத்தியிருப்பது பரபரப்பையும்,  அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.