‘அப்பா.. இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்’ - ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி..
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதலமைச்சர் ராஜிவ் காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் அமைந்துள்ள வீரபூமியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார்.
தந்தையின் பிறந்தாளையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “இரக்கமுள்ள ஆளுமை, நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் சின்னம்.. அப்பா, உங்கள் போதனைகள் எனக்கு உத்வேகம், உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இதற்கு முன் எப்போதும் செய்திராத விஷயங்களை செய்து 21ம் நூற்றாண்டுக்கு இந்தியாவை கொண்டு வர பங்காற்றியவர்” என்று தெரிவித்தார்.
एक करुणामय व्यक्तित्व, सौहार्द और सद्भावना के प्रतीक…
— Rahul Gandhi (@RahulGandhi) August 20, 2024
पापा, आपकी सीख मेरी प्रेरणा है, और भारत के लिए आपके सपने मेरे अपने - आपकी यादें साथ ले कर इन्हें पूरा करूंगा। pic.twitter.com/LFg6N43eZW