ரேபிஸ் பாதித்த பசுவின் பாலில் செய்த பிரசாதத்தை சாப்பிட்ட இரு கிராம மக்கள்!

 
s

உத்தரப் பிரதேசத்தில் நாய் கடித்து பலியான பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட  450 பேருக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டது.

உ.பி. கோரக்பூரில் வெறிநாய்க்கடிக்கு பலியான பசுவின் பாலில் தயாரிக்கப்பட்டபிரசாதத்தை தெரியாமல் குடித்த, 450 பேருக்கு முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.  
பால் நன்றாக காய்ச்சப்பட்ட பிறகே பிரசாதம் தயாரிக்கப்பட்டதால் ரேபிஸ் வைரஸ் அதில் அழிந்திருக்கும், மக்களின் அச்சத்தைப் போக்கவே தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.  செவ்வாய்க்கிழமை மாலை அசாதாரணமான முறையில் நடந்துகொண்ட அந்தப் பசு உயிரிழந்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறை தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. அந்த பசுவின் பால் இரண்டு உள்ளூர் கடைகளுக்கும் பல வீடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து பசுவின் உரிமையாளரான நவாமி யாதவ் கூறுகையில், கடந்த ஓரிரு நாட்களாக அந்தப் பசு உடல்நலக்குறைவாகக் காணப்பட்டது. ஆனால் செவ்வாயன்று அதன் நிலை மோசமடைந்தது. தெரு நாய் ஒன்று பசுவை எப்போது கடித்தது என்று எனக்குத் தெரியாது. பசுவின் நிலை மோசமடைந்ததால், கால்நடை மருத்துவர்களை தொடர்புகொண்டேன். அவர்கள் ஒரு நாய் பசுவை கடித்திருக்கலாம் என்று சந்தேகித்தனர்.  அதைத் தொடர்ந்து அந்தப் பசு குரைக்கத் தொடங்கி, செவ்வாய்க்கிழமை மாலை இறந்தது" என்றார். 

இதனிடையே துர்கா பூஜையின் போது தயாரிக்கப்பட்ட சரணாமிர்தம், இறந்து போன அந்த பசுவின்  பாலில் இருந்து தயாரிக்கப்பட்டது என தெரியவந்ததால், முன்னெச்சரிக்கையாக அதனை சாப்பிட்ட  சுமார் 450 பேர் வெறிநாய்க்கடி தடுப்பூசிகளைப் போட்டுககொண்டனர்.