2 வாரங்களில் 27% குறைந்த கொரோனா பாதிப்பு… முடிவுக்கு வருகிறதா இரண்டாம் அலை?

 

2 வாரங்களில் 27% குறைந்த கொரோனா பாதிப்பு… முடிவுக்கு வருகிறதா இரண்டாம் அலை?

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக, நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2 வாரங்களில் 27% குறைந்த கொரோனா பாதிப்பு… முடிவுக்கு வருகிறதா இரண்டாம் அலை?

இதுகுறித்து செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், “இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 1.8 சதவீதம் பேர் (2.52 கோடி மக்கள்) இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள்தொகையில் 2 சதவீதத்திற்குக் குறைவானவர்களுக்கு தொற்று பரவுவதை எங்களால் கட்டுப்படுத்த முடிந்தது. கடந்த 3ஆம் தேதி குணமடைந்தோர் விகிதம் 81.7% என்ற அளவில் இருந்தது.

2 வாரங்களில் 27% குறைந்த கொரோனா பாதிப்பு… முடிவுக்கு வருகிறதா இரண்டாம் அலை?

இந்த விகிதம் 85.6% ஆக அதிகரித்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 436 பேர் குணமடைந்துள்ளனர். இது நாட்டில் இதுவரை இல்லாத வகையில் மிக அதிகமான அளவு. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 81 ஆயிரத்து 386 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மே 7ஆம் தேதியன்று 4 லட்சத்து 14 ஆயிரம் பேர் ஒரு நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இரு வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை தற்போது 27 சதவீதம் குறைந்துள்ளது” என்றார்.