ஶ்ரீஹரிகோட்டாவிலும் பரவிய கொரோனா… ராக்கெட் ஏவுதளம் மூடப்பட்டது!

 

ஶ்ரீஹரிகோட்டாவிலும் பரவிய கொரோனா… ராக்கெட் ஏவுதளம் மூடப்பட்டது!

ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதள மையத்தில் பல விஞ்ஞானிகளுக்கு கொரோனா உறுதியான நிலையில் ராக்கெட் ஏவுதளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஶ்ரீஹரிகோட்டாவிலும் பரவிய கொரோனா… ராக்கெட் ஏவுதளம் மூடப்பட்டது!ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் ஶ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வுமையம் உள்ளது. இங்கு இருந்துதான் இந்திய ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. தற்போது அங்கு பணியாற்றி வரும் விஞ்ஞானிகள், ஊழியர்கள் மத்தியில் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், தற்காலிகமாக ஆய்வு மையம் மூடப்படுவதாக அறிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை அனைத்து ஆய்வுப் பணிகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீஹரிகோட்டாவிலும் பரவிய கொரோனா… ராக்கெட் ஏவுதளம் மூடப்பட்டது!
ஶ்ரீஹரிகோட்டாவுக்குள் தண்ணீர், மின்சாரம், தீயணைப்பு சேவை தவிர்த்து மற்ற அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்து ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான தயாரிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.