இந்தியாவில் 16 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு!!

 
covid

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 16,464 ஆக பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Covid Positive

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கு தாண்டி பதிவாகி வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. நேற்று  19,673  பேருக்குகொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 16,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த  எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்தை தாண்டியுள்ளது.  அத்துடன் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,26,396 ஆக அதிகரித்துள்ளது.

Corona

இதேபோல் இந்தியாவில் கொரோனாவிலிருந்து மொத்தம்  குணமடைந்தோர் எண்ணிக்கை  43365890  ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில்  1,43,989 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கடந்த 24 மணி நேரத்தில்  834167 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 204.34 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 4.31% ஆகவு பதிவாகி வருகிறது.