சித்தராமையாவுக்கு எதிராக லோக் ஆயுக்தா வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு..

 
 சித்தராமையாவுக்கு எதிராக லோக் ஆயுக்தா வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு.. 

மூடா இட ஒதுக்கீடு விவகாரத்தில் மைசூரு லோக் ஆயுக்தா வழக்கு  பதிவு செய்து விசாரணை நடத்த பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் பூர்வீக நிலம் மைசூரு மாநகர வளர்ச்சி கழகத்தால் பல திட்டங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நிலத்திற்கு மாற்றாக 14 சைட்டுகள் பார்வதிக்கு வழங்கப்பட்ட நிலையில் அவை முறைகேடாக அதிக விலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஆர்டிஐ ஆர்வலர் சினேகமை கிருஷ்ணா என்பவர் ஆகஸ்ட் எட்டாம் தேதி பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: சித்தராமையா

அதே நேரத்தில் இந்த விவகாரத்தை விசாரிக்க ஆளுநர் அனுமதி வழங்கிய நிலையில் அதை எதிர்த்து முதல்வர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனு நேற்று நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று முதல்வருக்கு எதிராக மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மூன்று மாதங்களுக்குள் விசாரணையின் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்காண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் படி வரும் ஓரிரு நாட்களுக்குள் முதல்வருக்கு எதிராக லோக் ஆயுக்தா  வழக்கு பதிவு செய்ய உள்ளனர். மறுபுறம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு , முதல்வர் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் உறுதியாகி உள்ளன.