கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவனை கையும் களவுமாக பிடித்து மொட்டையடித்த மனைவி

 
Couple Paraded in Andhra Pradesh Video: Husband, In-Laws Shave Woman and Her Lover's Head Half As Punishment on Suspicion of Having Illicit Relationship in Sri Sathya Sai District

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்த கணவர் மற்றும் அவரது காதலியை கையும் களவுமாகப் பிடித்த மனைவி மொட்டை அடித்து வீதிகளில் ஊர்வலமாக இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதல் ஜோடிக்கு இப்படியும் ஒரு நூதன தண்டனை; உறவினர்களின் கொடூர  செயல்..! - Tamil Spark

ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் ஊத்துகூரை சேர்ந்த உசேன் என்பவருக்கும், இந்துபுரம் ரஹ்மத்பூரில் வசிக்கும் நஜியா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. உசேன் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் உசேன் சில மாதங்களாக திலக் நகரை சேர்ந்த ஷபானா என்ற பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

இது தொடர்பான ஒரு வழக்கு காவல் நிலையம் வரை சென்று பின்னர் உறவினர்கள் ஒன்று கூடி இவர்கள் இடைய சமாதானம் செய்து வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன், வீட்டில் பிரியாணி செய்யும் போது, ​​பிரியாணியை எடுத்து சென்று, காதலியின் வீட்டில் கொடுத்துள்ளார் உசேன். இது தொடர்பாக மீண்டும் ஒருமுறை கணவன் - மனைவி இடையே சண்டை ஏற்பட்டது. 

இந்நிலையில், கணவர் உசேன் திலக் நகரில் இருக்கும் காதலி வீட்டில் தனிமையில் இருப்பதை அறிந்த நஜியா, கையும் களவுமாக பிடித்து இருவரையும் வீதிக்கு அழைத்துவந்தார். பின்னர்  நஜியாவின் உறவினர்கள் இருவரையும் பிடித்து பாதி மொட்டை அடித்து கைகளை கயிற்றல் கட்டி இந்துபுரம் திலக் நகர் தெருக்களில் ஊர்வலமாக செருப்பு மாலை அணிவித்து  இழுத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட நஜியா காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.