#Breaking கர்நாடக சட்டமன்ற தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

 
tn

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

tn

கடந்த 10ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவுகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. 224 தொகுதிகளுக்காக 34 மாவட்டங்களில் 36 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் இன்று காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு கர்நாடகாவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் 5 வாக்கு என்னும் மையங்கள் உள்ளன. இதில் 32 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.  இதையடுத்து குறிப்பிட்ட ஐந்து வாக்கு எண்ணும்  மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 

ttn

பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தொடர்ந்து சுற்று  எண்ணிக்கை இருக்கும்.  முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இதைத்தொடர்ந்து இன்று பிற்பகலுக்குள் கர்நாடக சட்டப்பேரவையை ஆட்சி செய்யப் போவது யார் என்பது தெரியவரும்.  வாக்கு எண்ணும்  மையங்களில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமாக தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.