7 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

 
tn

கேரளா ,உத்தரபிரதேசம் , திரிபுரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று தொடங்கியுள்ளது.

election commision

கேரளாவில் உம்மன் சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி , திரிபுராவில் இரண்டு தொகுதிகள் ,  ஜார்கண்ட், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா  ஒரு தொகுதிகள் என மொத்தம் 7 தொகுதிகளுக்கு கடந்த 5ம் தேதி  இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை செப்டம்பர் 8ம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

tn

இந்நிலையில்  உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் காலியான ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், அதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.  வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.