‘குறைந்து வரும் கொரோனா’: ஒரே நாளில் எத்தனை பேர் பாதிப்பு தெரியுமா?

 

‘குறைந்து வரும் கொரோனா’: ஒரே நாளில் எத்தனை பேர் பாதிப்பு தெரியுமா?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,968 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

‘குறைந்து வரும் கொரோனா’: ஒரே நாளில் எத்தனை பேர் பாதிப்பு தெரியுமா?

கொரோனா வைரஸுக்கு எதிரான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாராகி, மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட தொடங்கிவிட்டன. சீரம் நிறுவனத்திடம் இருந்து 1.10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்த மத்திய அரசு, பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்படவிருப்பதாக அறிவித்துள்ளது. வரும் 16ம் தேதி முதல் முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது. இதனிடையே, புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்திருக்கும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

‘குறைந்து வரும் கொரோனா’: ஒரே நாளில் எத்தனை பேர் பாதிப்பு தெரியுமா?

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,968 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த கொரோனா பாதிப்பு 1,04,95,147 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒரே நாளில் 202 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதால், மொத்த பாதிப்பு 1,51,529 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து 1,01,29,111 பேர் குணமடைந்த நிலையில் 2,14,507 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.