சிக்கிமில் நோட்டாவுக்கு கீழ் காங்கிரஸ்

 
rahul

சிக்கிமில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வர் பிரேம் சிங் அரியணை ஏறினார்.

சிக்கிமில் மொத்தவுள்ள 32 சட்டப்பேரவை தொகுதிகளில் 31 இடங்களில் வென்று தனப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா. எதிர்த்து போட்டியிட்ட சிக்கிம் ஜனநாயக முன்னணி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. சிக்கிம் ஜனநாயக முன்னணியின் தலைவர் பவன் குமார் சாம்லிங் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மீண்டும் ஆட்சியை பிடிக்க உள்ளது.

இந்நிலையில் சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் நோட்டாவைவிட குறைவான வாக்குகளை காங்கிரஸ் பெற்றுள்ளது. நோட்டாவுக்கு 0.99 சதவீதம் வாக்குகளும், காங்கிரஸ் 0.32 சதவீதம் வாக்குகளும், பாஜகவுக்கு 5.18 சதவீதம் வாக்குகளும் கிடைத்துள்ளது.