“வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.50,000 கோடி நிதி தேவை"- சித்தராமையா

 
தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: சித்தராமையா

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.50,000 கோடி நிதி தேவைப்படுவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Image

கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அம்மாநில முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, “கர்நாடக அரசின் ஆண்டு பட்ஜெட் ரூ.3 லட்சத்து 10 கோடி, ரூ.1 லட்சம் கோடி வரவேண்டிய இடத்தில் மத்திய அரசு ரூ.50 ஆயிரம் கோடி மட்டுமே வழங்குகிறது. 15-வது நிதிக்குழு கர்நாடகாவுக்கு அநீதி இழைத்துள்ளது. கர்நாடகாவில் இருந்து ரூ.4 லட்சம் கோடி நிதியை மத்திய அரசுக்கு கொடுத்துள்ளோம். மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.5,496 கோடி நிதியை பாஜக அரசு வழங்கவே இல்லை. கர்நாடகாவில் எனது ஆட்சியின் போது ரூ.1.18 கோடி கடனாக இருந்தது. தற்போது பசவராஜ் பொம்மை ஆட்சியில் கர்நாடக அரசின் கடன் ரூ.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அறிவித்த 5 திட்டங்களை நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரிவாக ஆலோசனை நடத்தி அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்படும். 

200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும்.  காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என பாஜக பொய்யான பிரச்சாரம் செய்துவருகிறது. திட்டங்களை நிறைவேற்ற ரூ.50,000 கோடி போதுமானது” என்றார்.