'தன்னை காப்பாற்ற அம்பானி, அதானியிடம் மன்றாடுகிறார் மோடி' - ராகுல் காந்தி

 
அதள பாதாளத்தில் இந்திய பொருளாதாரம் – ராகுல்காந்தி கவலை

தோல்வியில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு அம்பானி, அதானியிடம் பிரதமர் மோடி மன்றாடுகிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

Image

உத்தரபிரதேசத்தின் கன்னோஜ் தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி, “எழுதி தருகிறேன் உ.பி- யில் பாஜக படு தோல்வி அடையும், நான் உத்திரவாதம் தருகிறேன். மோடி மீண்டும் பிரதமராக மாட்டார். அவரின் ஆட்டம் முடிந்தது

இந்த 10 ஆண்டுகளில் பல உரை நிகழ்த்தியுள்ள பிரதமர் மோடி ஒருமுறை கூட அம்பானி, அதானி பெயர்களை குறிப்பிட்டு பேசியது இல்லை.. யாராவது பயம் கொள்ளும்போது அவர்களை காப்பாற்றக்கூடிய நபர்களின் பெயர்களை நினைத்து கொள்வார்கள். அதனால் தான் இப்போது அவர்களை பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். அதானி பணத்தை டெம்போவில் அனுப்புவதாக தனது சொந்த அனுபவத்தில் பிரதமர் மோடி கூறுகிறார். 15 நாட்களுக்கு உங்கள் கவனத்தை திசைதிருப்ப பிரதமர் மோடி, அமித்ஷா முயற்சிப்பார்கள். உஷாராக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.